கணிப்புகளை விடுங்க… சிந்திய ரத்தத்துக்கு ஒட்டு வராமலா போய்விடும்.. சீமான் தம்பிகள் நம்பிக்கை!

சென்னை: ஊடகங்களில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏற்க மறுத்துள்ள சீமானின் நாம் தமிழர் கட்சியினர் சிந்திய ரத்தத்துக்கு ஓட்டு வராமலா போய்விடும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், அமமுக தலைமையில் ஒரு அணியும், கமலின் மக்கள் நீதி மய்யம் தனியாகவும், சீமான் நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட்டன. நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்தது. இதன் மூலம் விவாசாய பெருங்குடி மக்களின் நம்பிக்கை பெற்றுவிடலாம் என எண்ணி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விவசாயிகளை கவரும் வகையிலான பிரச்சாரங்களை முன்னெடுத்தார்.

33 சதவீத ஒதுக்கீடு

மக்களவை தேர்தலில் மிக சமானிய மக்களை வேட்பாளர்களாக நிறுத்திய சீமான், பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டையும் தேர்தலில் அறிமுகம் செய்தார். இதன்படி தமிழகத்தில் பல தொகுதிகளில் நாம் தமிழர் சார்பில் பெண்கள் தான் போட்டியிட்டனர்.

வித்தியாசமான பிரச்சாரம்

இதனிடையே சீமான் கட்சியினரின் வளர்ச்சியை முன்னிறுத்தி மேற்கொண்ட் பிரச்சாரங்கள் தமிழகம் முழுவதுமே மிக வித்தியாசமாக இருந்தது. சீமான் 40 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்தார். இதனால் எப்படியும் நல்லதொரு முடிவு இந்த தேர்தலில் கிடைக்கும் என் நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கையில் உள்ளனர்.

ஏற்க முடியாது

இந்நிலையில் இன்று மாலை வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் நாம் தமிழர் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சிககு ஒரு இடம் கூட கிடைக்காது என எல்லா ஊடகங்களும் அறிவித்துள்ள நிலையில், கருத்துக்கணிப்பு எல்லாம் தூற எறியுங்கள் என நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். சிந்திய ரத்தத்துக்கும் , உழைப்புக்கும் ஓட்டுக்கள் நிச்சயம் விழும் என சீமானின் நாம் தமிழர் தம்பிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

நம் தமிழர் நம்பிக்கை

இந்நிலையில் மே23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளினை நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். வெற்றி பெறமுடியாவிட்டாலும் பெரிய அளவில் இந்த முறை வாக்கு வங்கி உயரும் என நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளார்கள்.

tamil.oneindia.com

TAGS: