தோல்விக்கு காரணம் சபரிமலை; ஒப்புக்கொண்டது இந்திய கம்யூ.,

திருவனந்தபுரம்: ‘கேரளாவில் கம்யூ., கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்னைதான் காரணம்’ என இந்திய கம்யூ., பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் கேரளாவில் 20 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே, ஆளுங்கட்சியான இடது முன்னணி வென்றது. தோல்வியை ஆராய இந்திய கம்யூ., சார்பில் குழு அமைக்கப்பட்டது. நேற்று நடந்த மாநில நிர்வாகக்குழுவில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கை விபரம்:

சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும் பிரச்னையில் இடது முன்னணி அரசு எடுத்த நடவடிக்கை இந்துக்களை கோபம் அடைய செய்தது. அது எதிர்ப்பாக மாறியது. சபரிமலை பிரச்னையை அலட்சியப்படுத்தும் வகையில் இடது முன்னணியின் தேர்தல் பிரசாரம் அமைந்திருந்தது. அரசுக்கு எதிரான பிரசாரத்தை தடுக்கவில்லை. சிறுபான்மையினர் ஒருங்கிணைந்தது தோல்விக்கு மற்றொரு காரணம். மீண்டும் மோடி ஆட்சி வருவதை தடுக்க சிறுபான்மையினர் எடுத்த முடிவு இடது முன்னணிக்கு பாதகமாக அமைந்தது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

‘சபரிமலை பிரச்னைதான் படுதோல்விக்கு காரணம்’ என இந்திய கம்யூ., பகிரங்கமாக ஒத்துக்கொண்டாலும், மார்க்சிஸ்ட் கட்சி மவுனம் காக்கிறது.

-dinamalar.com

TAGS: