எட்டு வழிச் சாலை: ஒத்துழைப்பு கேட்கும் தமிழக முதல்வர்; கேள்வி எழுப்பும் விவசாயிகள்

எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தரும்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

மேற்கு மாவட்டங்களான சேலம் , ஈரோடு ,திருப்பூர் ,நாமக்கல் மற்றும் கோவை தொழில் வளம் நிறைந்த பகுதி என்றும், அருகாமையிலுள்ள கேரள மாநிலத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் தடையில்லாமல் செல்லவும் சாலைகள் மேம்பாடு இருத்தல் வேண்டும் என சேலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் பேசினார்.

மேலும், தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அமைட்டப்பட்டவை, அவை வாகனங்களின் எண்ணிக்கைக்கு தக்கவாறு கட்டப்பட்டவை என்றும் தற்போது வாகன என்ணிக்கை 2001ஆம் ஆண்டை காட்டிலும் 300 சதவீதம் உயர்துள்ளதாகவும் சாலைகளின் தேவைகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

நிலத்தை பறித்து திட்டத்தினை நிறைவேற்றுவது அரசின் நோக்கம் அல்ல

உலகத் தரத்துக்கேற்ப நவீன சாலை வசதிகள் அமைக்கவும் மத்திய அரசின் திட்டத்தின்படி இச்சாலை பணிகள் நடைபெறுவதாக குறிப்பிட்டார் முதல்வர். மேலும், இப்பகுதிகள் வளர்ந்துவரும் நிலையிலும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளாகவும், இன்னும் பல தொழில்கள் வளர கூடிய நிலையில் உள்ளதால் ,போக்குவரத்து மேம்பாட்டிற்க்கு முன்னோடியாக இவ்வகை சாலைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், தற்போது சில பிரச்சனைகள் காரணமாக நடவடிக்கை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி,

இவ்வழக்கு குறித்து நில உரிமையாளர்களிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்தி, சாலை மேம்பாட்டிற்கு வழிவகுக்க வேண்டும் என்றார்.

மக்களிடம் அரசின் கருத்துகளை திணித்து நிலத்தை பறித்து திட்டத்தினை நிறைவேற்றுவது அரசின் நோக்கம் அல்ல என்றும் பொருளாதார வளர்ச்சி, படித்த இளைஞர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு , விபத்துகளைக் குறைத்தல், மக்களின் உயிர்சேதம் பொருள்சேதம் தவிர்க்கவும், எரிபொருள் சேமிப்பு ,சுற்றுசூழல் பாதுகாப்பு, பயணநேர மிச்சப்படுத்தல் போன்றவற்றை கருத்தில் சுற்றுசூழல் பாதுகாப்பு இவற்றை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் இவ்வறாக சாலைகள் மேம்படுத்த முயற்சிகள் எடுக்கபடுவதாக தெரிவித்தார்.

விவசாயிகள் கண்டனம்

விவசாயிகள் எதிர்ப்பு

அரசு போடும் சாலையில் செல்வது கார்பரேட் முதலாளிகளாகத்தான் இருப்பார்கள் என்றும், பத்து வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலையை விரிவாக்க முயலாமல், மீண்டும் சாலை அமைக்க முயன்றால், அடுத்த பத்து வருடங்களில் மீண்டும் சாலை அமைக்க அரசு தயாராக உள்ளதா என ட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தில் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் கேள்வி எழுப்பினார்.

எட்டு வழிச் சாலைக்கான திட்டத்தில் நிலம் கையகபடுத்தும் முயற்சி நடந்தபோது தமிழக முதல்வர் பெரும்பான்மையான விவசாயிகள் தங்கள் நிலங்களை தாமாக முன்வந்து இத்திட்டத்திற்கு தருவதாக கூறியதையும், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தினையும் அதிமுக அரசு செயல்படுத்தாது என்றதையும் சுட்டிகாட்டிய எட்டு வழிச் சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அருள், இதே தேர்தல் பிரசார சமயத்தில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பிரசார மேடையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எட்டுவழிச் சாலை திட்டத்தினை கொண்டுவர தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார் என்றதையும், இத்திட்டம் விரைவில் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றதையும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த திட்டத்தினை எதிர்த்ததும், விவசாயிகளுக்காக பாடுபடப்போவதாக கூறிய பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக மற்றும் பாஜகவுடன் இணைந்து கூட்டணி கட்சியாக அதே மேடையில் அமர்ந்து இருந்ததும் மத்திய அமைச்சரின் வார்த்தைகளுக்கு மறுப்பு சொல்லாமல் இருந்ததும் விவசாயிகளை வேதனை படுத்தியதாக அவர் கூறினார்.

கோம்பூர் வனப்பகுதியில் வாழும் மான், கரடி காட்டெருமைபோன்ற வனவிலங்குகளால்த ங்களுக்கு பதிப்பு அதிகம் இல்லை என்றும், இவ்விரைவு சாலைத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் இவ்விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார் இந்த எதிர்ப்பு இயக்கத்தின் ஊடகப் பிரிவின் பொருப்பாளரான பழனிசாமி.

காட்டெருமைகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது மஞ்சவாடி கணவாய் பகுதியில் உள்ள செங்குட்டை ஏரி. ஆனால் இச்சாலை திட்டமோ இந்த ஏரியின் நடுவில் அமைவதாக பழனிசாமி குற்றம்சாட்டினார். -BBC_Tamil

TAGS: