பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 113 பேர் பலியாகியுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு இதுவரை 184 பேர் பலியாகி உள்ளனர். இதில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 113 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக அவுரங்காபாத் மாவட்டத்தில் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கயா மாவட்டத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே, பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
-athirvu.in