சர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியர்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்க்கரை நோய் என்பது இன்று சாதாரண தலைவலி போல் ஆகிவிட்டது. 40 வயதை கடந்தவர்களுள், யாரை கேட்டாலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் 20 வயதுக்கு மேற்பட்டோரையும் இந்த சர்க்கரை நோய் விட்டுவைப்பதில்லை. இது குறித்து இந்தியாவில் 28 நகரங்களில் நோவா நார்டிஸ்க் கல்வி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் திடுக்கிடும் தகவலாக இந்தியர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் சரிவர மேற்கொள்வதில்லை என தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஹச்பிஏ1சி எனப்படும் சர்க்கரை நோய் கண்டறியும் சோதனையில் ஒருவருக்கு 8%க்கு மேல் சென்றால் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு சர்க்கரை நோய் தாக்கியுள்ளது என்பதை அறிய முடியும்.

இந்த ஆய்வினை நோவா நிறுவனம், 1 லட்சத்து 80 ஆயிரம் பேரிடம் நடத்தியது. டெல்லியில் 8.8%, சென்னை மற்றும் கொல்கத்தாவில் 8.2% மற்று 8.1% முறையே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கே அதிகம் காணப்படுகிறது என தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம், சரியான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது ஆகியவையே என கண்டறியப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி சர்க்கரை நோயால் உடல் உறுப்பு, கண்கள், சிறுநீரகம், மற்றும் நரம்பு ஆகியவை அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற அரிய நோய்கள் மனிதர்களை இன்று சாதாரணமாக தாக்கக்கூடிய நோய்களாக மாற துரித உணவுகள், மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றம் ஏற்பட்டதே ஆகும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

-athirvu.in

TAGS: