காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் ராகுல் காந்தி நீடிப்பு!

கடந்த மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தான் பதவி விலகப் போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது தலைமைப் பதவியை ஏற்க எவரும் முன் வராததாலும் அக்கட்சியின் உறுப்பினர்களின் தொடர் வலியுறுத்துதலாலும் தனது மனதை மாற்றிக் கொண்ட ராகுல் காந்தி தலைமைப் பதவியில் நீடிப்பதாக புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய அதிபர் தேடப் பட்ட போது மக்களவைத் தேர்தலின் போது தீவிர அரசியலில் ஈடுபட்ட ராகுலின் சகோதரி பிரியங்கா வதேரா பெயரும் முன் வைக்கப் பட்டிருந்தது. ஆனால் அவருக்கு காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியதால் அவர் நிராகரிக்கப் பட்டார். இதையடுத்து காங்கிரஸ் 2 ஆம் கட்டத் தலைவர்கள் பலரது பெயர் முன் வைக்கப் பட்ட போதும் அவர்கள் தமது 2 கட்டத்துக்கு அடுத்த கட்டத்துக்கு தயாராகவில்லை.

இவ்வாறு ஒரு முடிவும் எட்டப் படாத நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்டில் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களும் நெருங்கி வருவதனால் காங்கிரஸுக்கு தலைமை இல்லாவிட்டால் பொது மக்களிடையே களங்கம் ஏற்படும் என்ற சூழல் ஏற்பட்டதால் வேறு வழியின்றி தலைவருக்கான பதவியில் தானே நீடிப்பதாக ராகுல் காந்தி முடிவெடுத்துள்ளார்.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் கட்சியில் இதுவரை காந்தியின் குடும்பத்தை சேர்ந்தவர்களே தலைவர்களாகப் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-4tamilmedia.com

TAGS: