கோவை.. சர்ச், கோவில்களில் குண்டு வைக்க சதி.. 3 பேர் கைது.. 5 நாள் போலீஸ் காவலுக்கு கோர்ட் உத்தரவு

கோவை: கோயம்புத்தூரில் உள்ள சர்ச், கோயில்களில் குண்டு வைக்க திட்டம் போட்ட 3 இளைஞர்களையும், 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை முதன்மை மாவட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது .

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சமயத்தில், அந்த தீவிரவாதிகளோடு இணைய தளம் மூலம் தொடர்பில் இருந்தவர்கள் யார் என ஆராயப்பட்டது.

அப்போது, கோவையை சேர்ந்த 7 பேர் வீடுகளில் கடந்த 12-ம் தேதி என்.ஐஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான செல்போன்கள், சிம்கார்டுகள், லேப்- டாப், உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் கோவை உக்கடத்தைச் சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான் மற்றும் கரும்புக்கடையைச் சேர்ந்த ஷேக் சஃபியுல்லாஹ் ஆகியோர் அந்த தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதி சக்திவேல் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் 28-ம் தேதி வரை அதாவது நாளை வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த 3 பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாதச் செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாகப் பரப்பியதாகவும், தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றச் சதித் திட்டம் தீட்டி இருப்பதாகவும் கோவையில் உள்ள சர்ச் மற்றும் கோயில்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போத்தனூர் போலீசார் தங்களது எப்ஐஆரில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றத்தில் போத்தனூர் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: