அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை

வியன்னா : அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடும் பட்சத்தில் அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராக வாய்ப்புள்ளது என ஐ.நா.விற்கான அணு ஆயுத பரவல் தடுப்பு அமைப்பின் தலைவர் லெஸினா ஜெர்போ கூறினார்.
ஆணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சி.டி.பி.டி. எனப்படும்.அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தமான, என்.பி.டி., 1968ல், ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவை.இந்த ஒப்பந்ததில், 180-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனாலும், இந்தியா, கொரியா, பாகிஸ்தான், நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

இந்நிலையில் 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள என்.எஸ்.ஜி எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெற இந்தியா தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கு சீனா முட்டைகட்டை போடுவதால் குழுவில் இந்தியாவில் இடம்பெற முடியவில்லை. இந்த குழுவில் இடம்பெற இந்தியா விண்ணப்பம் செய்ததை தொடர்ந்து, பாகிஸ்தானும் விண்ணப்பித்துள்ளது.

இது குறித்து ஐ.நா.விற்கான அணு ஆயுத பரவல் தடை அமைப்பின் தலைவர் லெஸினோ ஜெர்போ டி.வி. சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், சி.டி.பி.டி. எனப்படும் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதால் தான் இன்று உலகம் பாதுகாப்பானதாக உள்ளது. இதில் இந்தியா இடம் பெறவில்லையெனில் பாதுகாப்பான உலகை உருவாக்க முடியாது.

” வட கொரியா தவிர வேறு எந்த நாடும் அணு சோதனைகளை நடத்தவில்லை. எனவே அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டத்தில் இந்தியா கையெழுத்திடும் பட்சத்தில் என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராக வாய்ப்புள்ளது. அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.

-dinamalar.com

TAGS: