பெங்களூரு: ”தமிழகம் எத்தனை திட்டங்களை வேண்டுமானாலும் செயல்படுத்தட்டும்; எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால், கர்நாடக திட்டங்களுக்கு தமிழகம் தொந்தரவு கொடுக்கக்கூடாது,” என, நீர்ப்பாசனத்துறை அமைச்சர், டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இது குறித்து, அவர் அளித்த பேட்டியின் விபரம்:
வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை சேமிக்க, தமிழகம் அணை கட்டினால், அதை நாங்கள் ஆட்சேபிக்கபோவதில்லை. அதே போல, கர்நாடகத்தின் நீர்ப்பாசன திட்டங்களுக்கு, தமிழகம் இடையூறு செய்ய வேண்டாம்.
காவிரி நடுவர் மன்றம், உச்சநீதி மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவை, கர்நாடகாவுக்கு ஒதுக்கிய நீரின் அளவைத்தான் நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். எனவே, 400 மெஹாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு, தமிழகம் தொந்தரவு தரக்கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.
-dinamalar.com