கவுகாத்தி : பீகாரை தொடர்ந்து அசாமிலும் மூளைக் காய்ச்சல் நோய் பரவியதில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகாரில் Acute Encephalitis Syndrome எனப்படும் மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 133 பேர் பலியாயினர். இதில் முஷாபர்நகர் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளன.
முஷாபர்நகர் மருத்துவமனையில் மேலும் 290 குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான அசாமின் ஜோர்ஹாட், திப்ரூகார் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் தாக்கிய சிலர் ஜோர்ஹாட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிர் பலி சம்பவத்தையடுத்து மாநில சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
-dinamalar.com