தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் வகையில் ஐ.நா அறிக்கை – இந்தியா கடும் கண்டனம்!

காஷ்மீர் குறித்த ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கை தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்ட விதிகளுக்கு ஏற்ப காஷ்மீரில் மக்களின் சுய நிர்ணய உரிமையை இந்தியா மதிக்க வேண்டும் என்றும், அளவுக்கு அதிகமான படைகளை பயன்படுத்தி இணைய சேவையை முடக்கி வருவதாகவும் மனித உரிமைகள் குறித்த ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்றநிலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அரசு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், தீவிரவாதத்தை வெளிப்படையாகவே ஆதரித்து வரும் நாட்டுக்கும் செயற்கைச் சமநிலையை உருவாக்கும் முயற்சி இது எனக் கூறியுள்ளது.

உள்நோக்கத்தோடு சித்தரிக்கப்பட்ட தவறான கதை என்றும், இந்திய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மீறி, எல்லை கடந்த தீவிரவாதத்தைக் கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்ட அறிக்கை எனவும், இந்தியா விமர்சித்துள்ளது.

-https://athirvu.in

TAGS: