முகிலனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு!

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்ததாக கரூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னையில் இருந்து அழைத்துச் சென்றனர்.

கரூர் மாவட்டக் குற்றவியல் நீதிமன்ற எண் 2ன் நீதிபதி விஜய கார்த்திக் முன்னிலையில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் முகிலன் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, இருட்டு அறையில் அடைத்து முகிலன் சித்ரவதை செய்யப்பட்டதாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

-https://athirvu.in

TAGS: