இந்திய எல்லையில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் சிவப்பு பதாகையை உயர்த்திப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தலாய் லாமா பிறந்தநாள் இந்தியாவில் உள்ள எல்லையோர கிராமத்தில் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜம்மு காஷ்மீரின் லடாக்கை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே 11 சீனர்கள் பதாகையை உயர்த்திப் பிடித்தனர். இதுகுறித்து இந்திய ராணுவ அதிதாரிகள் அளித்துள்ள விளக்கத்தில் சீனர்கள் சாதாரண உடையில் இருந்ததால் அவர்கள் ராணுவத்தினரா என்று உறுதிசெய்ய இயலவில்லை என்றும், எல்லையைத் தாண்டி அவர்கள் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தலாய் லாமாவுக்கு விழா நடத்தப்படும் கிராமத்தை நோக்கி, தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நின்றபடிதான் சிவப்பு நிற பதாகையை உயர்த்திப் பிடித்ததாகவும் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
-athirvu.in