வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான் -2: என்ன சொல்கிறார் இஸ்ரோ தலைவர் சிவன்?

கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது.

சந்திரயான் ஏவப்பட்டதை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சிவன் ஆற்றிய உரை பின்வருமாறு.:

”இது நிலவை நோக்கிய இந்தியாவின் வரலாற்று பயணத்தின் தொடக்கமாக உள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு அறிவுப்பூர்வமான வழியில் கண்டுபிடிக்கப்பட்டு மிக சீக்கிரமாக அது சரி செய்யப்பட்டது. அந்த தொழில்நுட்ப கோளாறுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்தும் 24 மணி நேரத்தில் நடைபெற்றது.

அடுத்த ஒன்றரை நாட்களுக்குள் திருத்தங்கள் சரியான பாதையில் மேற்கொள்ளபட்டதா என்று சோதிக்கப்பட்டது.

இந்த மிகப்பெரிய பணி இஸ்ரோ குழுவின் கடினமான உழைப்பால் சாத்தியமானது. குறிப்பாக பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மற்றும் பிற ஊழியர்கள் இதற்காக தொடர்ந்து பணி செய்தனர்.

அவர்கள் சொந்த விருப்பங்களை விடுத்து, தங்களின் குடும்பத்தையும் மறந்து தொடர்ந்து இதற்காக பணியாற்றினர்.

நிபுணர்கள் குழு கடந்த ஏழு நாட்களுக்காக ஒவ்வொரு அமைப்பும் ஒழுங்காக நடைபெற்றதா என்று சரிபார்த்தனர்.

என்ன சொன்னார் சிவன்?படத்தின் காப்புரிமைISRO

சந்திரயான் – 2 திட்டத்தை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பணிவார்ந்த நன்றிகளை தெரிவிப்பது எனது கடமை.

முந்தைய மிஷனைக்காட்டிலும் இதில் ஜிஎஸ்எல்வி மார்க் 3-ன் செயல்திறன் இந்த முறை 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய கமிட்டியின் பரிந்துரைகளின்படி சந்திரயான் 2 முழுமையாக வடிவடைக்க செயற்கைக்கோள் குழு கடந்த ஒன்றரை வருடங்கள் கடினமாக பணியாற்றியது. அவர்கள் எந்தவித ஓய்வும் இன்றி பணியாற்றினர்.

அடுத்த ஒன்றரை மாதத்திற்கு செயற்க்கைக்கோள் குழு பணி செய்து சந்திரயானை நிலவின் சுற்றுப்பாதையில் பொருத்த வேண்டும். அதன்பிறகு சவுத் போலுக்கு அருகில் அதற்கு அமர்த்தப்பட்டதா என்று சோதிக்கப்படும்.

இந்தியா மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகமும் இதற்காக காத்திருக்கிறது.

அதை தற்போது நாங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் ” என்று சிவன் தான்ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். -BBC_Tamil

TAGS: