பீகாரில் விண்ணில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் கல் குறித்த ஆராய்ச்சிகள் மும்முரம் அடைந்துள்ளன.
பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள மகதேவா என்ற கிராமத்தில், கடந்த திங்கள் கிழமை அன்று விளைநிலங்களில் விவசாயிகள் உழவுப் பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விண்ணில் இருந்து தீப்பற்றி எரிந்த நிலையில் ஒரு கல் விழுந்ததாகவும், விழுந்த வேகத்தில் அந்தக் கல் நிலத்தில் 4 அடி ஆழத்தில் சென்றதாகவும் விவசாயிகள் கூறினர். இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற அரசு அதிகாரிகள் கல்லை மீட்டனர்.
சுமார் 15 கிலோ எடை கொண்ட அந்தக் கல்லுக்கு மின்காந்த சக்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் தங்க நிறத்தில் மின்னுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மர்மங்கள் நிறைந்த அந்தக் கல் குறித்து ஆய்வு நடத்துமாறு அம்மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பாட்னாவில் வைத்து அந்தக் கல்லை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பார்வையிட்டார்.
-athirvu.in