இங்கிலாந்து கப்பலில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் 9 இந்தியர்களை ஈரான் விடுவித்துள்ளது.
ஈரான் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலை கடந்த சில வாரங்களுக்கு முன் இங்கிலாந்து சிறைபிடித்தது. இதற்குப் பதிலடியாக இங்கிலாந்தின் ஸ்டெனா இம்பெரோ ((Stena Impero)) என்ற எண்ணெய்க் கப்பலை ஹார்முஸ் நீரிணையில் ஈரான் நாடு சிறைபிடித்தது. இந்தக் கப்பலில் 21 இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என ஈரானிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து 9 இந்தியர்களை ஈரான் விடுவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள இந்தியர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஈரானின் எண்ணெய் கப்பலான வி எல் சி சி கிரேஸ் 1 ((VLCC Grace 1)) என்ற கப்பலில் பணியாற்றி வரும் 24 இந்தியர்களை வெளியுறவுத்துறை அதிகாரிகள் சந்தித்துப் பேசியதாகவும் வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
-athirvu.in