பிளஸ் டூ ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என்பது போல, அதன் தொன்மையான ஆண்டு குறிப்பிடப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ ஆங்கிலப்பாடப்புத்தகம் 10 ஆண்டுகளுக்கு பின்பு இந்த ஆண்டு புதிதாக தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 142 ம் பக்கத்தில் தொன்மையான மொழிகள் பற்றிய பாடத்தில், தமிழை விட சமஸ்கிருதமே மூத்த மொழி என குறிப்பிடப்பட்டு உள்ளது.
உலகின் தொன்மையான மொழிகள் பட்டியலில், சைனீஸ், ஹீப்ரோ, லத்தீன், தமிழ், கிரேக், சம்ஸ்கிருதம், அரபிக் என்று வரிசைப்படுத்தி, நான்காவதாக தமிழ் இடம்பெற்றுள்ள போதிலும், மொழிகளின் தொன்மையான ஆண்டு பற்றி குறிப்பிடும் போது, தமிழ் கிமு 300 ஆண்டுகள் பழமையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டுகள் என்றும் அச்சிடப்பட்டு உள்ளது.
இதன்மூலம், தமிழ் மொழி 2,300 ஆண்டுகள் பழமையானது போலவும், சமஸ்கிருதமோ 4,000 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளதாகவும், தமிழ் மொழியே உலகின் மூத்த மொழி என தமிழ் அறிஞர்கள் கூறிவரும் நிலையில், சமஸ்கிருதத்துக்கே பின்பே தமிழ் தோன்றியது போல் இளைய தலைமுறையினர் மத்தியில் பரப்பப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
-https://athirvu.in

























