கோவிலை மூடிய ஆக்கிரமிப்பாளர்கள்..!

மதுரையில் கட்டிடம் கட்டும் பணியின் போது, சிதிலமடைந்த நிலையில் பழங்கால சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், கோவிலையே மறைத்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டியும், ஆக்கிரமிக்கப்பட்டும் மறைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

பழங்கா நத்தம் ரவுண்டானா அருகே குடிருப்பு பகுதிகளும், ஏராளமான கடைகளும் உள்ளன. இங்கு ஒரு கடையை அதன் உரிமையாளர் இடித்து விட்டு புதிதாக கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டபோது அதன் அருகே கோவில் மண்டபம் போன்ற பகுதி காணப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த அப்பகுதி மக்களும், சிவனடியார்களும் சென்று பார்த்த போது, பராமரிப்பு இல்லாத சிவன் கோவிலைச் சுற்றிலும் மறைத்தும், நுழைவு வாயில் கூட தெரியாத வகையில் அடைத்து, வீடுகள், மற்றும் கடைகள் கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. உள்ளே நுழைவு வாயில் அருகே சுவருடன் ஒட்டிய வினாயகர் சிலையும், கோவில் மதில் சுவர்களும் சிதிலமடைந்து கிடப்பதை பார்த்து வேதனை அடைந்தனர்.

உள்ளே இருள் சூழ்ந்திருந்த நிலையில், கருவறையில் சிலைகள் உள்ளதா என்பதைக்கூட காணமுடியவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோவிலாக இருக்கும் என்று கூறப்படுவதால், இது பற்றி வருவாய்த்துறையினருக்கும், அறநிநிலையத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னரே, சிலைகள் உள்ளதா அல்லது திருட்டு போய் உள்ளதா என்ற விவரம் தெரியவரும்.
இதற்கிடையே சிதிலமடைந்த கோவிலை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்.

-https://athirvu.in

TAGS: