காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து மும்பையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பி உள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் தம்பி ரவூப் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக்கு அருகில் பயங்கரவாதிகளுடன் முகாமிட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்துவதோடு, மும்பையில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல் போன்ற நிகழ்வுகள் இனி நடக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதை உளவுத்துறை சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் மும்பையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் மூன்று பேரை அனுப்பி வைக்க ஜெய்ஸ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டார்.
-https://athirvu.in