இந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை!

வரும் 2027ம் ஆண்டு, மக்கள் தொகை அதிகம் கொண்ட முதல் நாடாக இந்தியா இருக்கும் என ஐ.நா அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக சீனா உள்ளது.

அதனைத்தொடர்ந்து இந்தியா, சுமார் 133 கோடி மக்கள் தொகையுடன் 2வது இடத்தில் உள்ளது. இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை இரு நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன. இருப்பினும் இந்தியாவின் இந்த முயற்சி ஓரளவுக்கு மட்டுமே பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாகவும், வரும் 2027ல் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்திய உலக மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடிக்கும் எனவும் ஐ.நா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் தென் மாநிலங்கள் சிறப்பாக செயல்படுவதாகவும், அங்கு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1 புள்ளி 8 என்ற அளவில் மட்டுமே இருப்பதாகவும் ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் வடமாநிலங்களில் அவ்வாறு இல்லாமல், வளர்ச்சி விகிதம் 2 புள்ளி 3 விகிதம் அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளதாகவும் ஐ.நா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்தியா எடுத்து வரும் முயற்சி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால் வரும் 2065ம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவின் மக்கள் தொகை குறைய வாய்ப்பிருப்பதாக ஐ.நா கணித்துள்ளது.

-athirvu.in

TAGS: