ஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது இந்தியா!

காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் அளித்த புகார் நிராகரிக்கப்பட்டதையடுத்து , இது உள்நாட்டு விவகாரம்தான் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சீனாவைத் தவிர இதர 14 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

மூடிய அறைக்குள் ரகசியமாக பாகிஸ்தான் கோரிக்கையை குறித்து விவாதம் நடத்திய ஐநா.பாதுகாப்பு கவுன்சில், இருநாடுகளும் சுமுகத் தீர்வு காணும்படி அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக இப்பிரச்சினையை சீனாவும் எழுப்ப முயற்சித்தது. ஆனால் பாகிஸ்தான் சீனாவின் முயற்சிகள் இந்தியாவால் முறியடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கான ஐ.நா.தூதர் சையத் அக்பருதீன் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட்டால் பேச்சு நடத்தத் தயார் என்று அறிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்துள்ள இந்தியா ஐநா.பாதுகாப்பு சபையின் ஆதரவையும் முழுமையாகப் பெற்றுள்ளது.

-https://athirvu.in

TAGS: