இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை தடுக்கத் திட்டம்!

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை மீண்டும் இந்தியாவுக்குள் திருப்பி விட திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இமயமலையில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை தடுத்து நிறுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானுக்குள் பாயும் நதிகளை இந்தியாவில் எல்லைக்குட்ட பகுதிகளுக்கு திருப்பி விடுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை பாதிக்காத வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

-https://athirvu.in

TAGS: