2 சீக்கிய பெண்களை மதம் மாற்றி திருமணம் – பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் 2 சீக்கியப் பெண்களை கடத்தி கட்டாய திருமணம் செய்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜக்ஜித் கவுர் என்ற சீக்கிய பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்ததாகவும், இதுகுறித்து பிரதமர் இம்ரான்கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண்ணின் குடும்பத்தார் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைத்துள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பாகிஸ்தானில் 2 சீக்கிய பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்ததற்கு இந்திய மக்களும், சீக்கியர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

மத்திய அரசும் பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதோடு இந்த சம்பவத்திற்கு உடனடியாக பரிகாரம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

-athirvu.in

TAGS: