மகராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரவமாக நடைபெற்று வருகிறது.
10 நாட்கள் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நாடு முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
கணபதி விசர்ஜன் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியின்போது மகராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அமராவதியில் 4 பேரும், ரத்னகிரியில் 3 பேரும், நாசிக், சிந்துதுர்க் மற்றும் சதாராவில் தலா இரண்டு பேரும், தானே, துலே, புல்தானா மற்றும் பண்டாரா நகரங்களில் தலா ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் மாயமான 5 பேரை தேடும்பணியில் பேரிடர் மீட்புக் குழுவினரும் நீச்சல் வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
-athirvu.in