இந்தியாவில் முதன்முறையாக ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை உருவாக்கிய தனியார் நிறுவனம்..!

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று, இந்தியாவிலேயே முதன்முறையாக ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை உருவாக்கியுள்ளது.

ஆயுதப்படையில் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்து தரும்படி மத்திய அரசு தனியார் நிறுவனங்களை வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், பெங்களூருவின் கோரமங்கலா பகுதியில் செயல்படும் SSS Defence நிறுவனம் ஒன்று முதன்முறையாக இரு ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை தானே தயாரித்துள்ளது. இதில் வைப்பர் என பெயரிடப்பட்டுள்ள துப்பாக்கி ஒன்று சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

அதேபோல் சபர் என பெயரிடப்பட்டுள்ள மற்றொரு துப்பாக்கி சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவு வரை இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டது என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இலகு ரக திறன் கொண்ட இந்த துப்பாக்கியை இரு பாலின பாதுகாப்பு வீரர்களும் பயன்படுத்தும் நோக்கில், தோள்பட்டையில் துப்பாக்கியை ஏந்தும் போது அதனை அட்ஜெட்ஸ்ட் செய்து கொள்ளும் வகையில் துப்பாக்கிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த நிறுவனம் செய்திராத இவ்வகை துப்பாக்கிகளை தாங்களே தயாரித்துள்ளதாக தெரிவிக்கும் SSS defence நிறுவனம், ஆயுத படைக்கு இதனை வழங்கி, அதுசார்ந்த தகவல்கள் மற்றும் உபகரணங்களையும் உடன் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனமானது சுமார் 20 கோடி செலவில், ஜிகானி என்ற இடத்தில் ஆயுத தொழிற்சாலை கிடங்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

-athirvu.in

TAGS: