அயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை – நீதிபதிகள்

அயோத்தி வழக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) 39-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், நாளை இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

அயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை நாளை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

முன்னதாக இம்மாதம் 18 ஆம் தேதிக்குள் இருதரப்பும் தங்கள் வாதங்களை முடித்து கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அயோத்தி நில உரிமை வழக்கின் விசாரணையை அக்டோபர் 18ஆம் தேதியுடன் முடிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

செப்டம்பர் 18ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், “அயோத்தி நில உரிமை வழக்கை முடிப்பதற்கான உத்தேச தேதிகளைக் கணக்கிடப்பட்டிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, இவ்வழக்கில் அனைத்து தரப்பும் வாதங்களும் அக்டோபர் 18-க்குள் முடிக்க வேண்டி இருக்கும்,” என்று கூறி இருந்தார்.

நாளை கடைசி நாள்

இன்று நீதிபதி ரஞ்சன் கோகோய், “இன்று 39வது நாள். நாளை 40வது நாள். நாளைதான் விசாரணை நடைபெறும் கடைசிநாளாக இருக்கலாம்” என்றார்.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வின் முன் இன்று மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான், நிர்மோஹி அஹாராவின் வழக்கறிஞர் சுசில் குமார் ஜெயினின் தாய் இறந்துவிட்டார் என்றார்.

மஹந்த் சுரேஷ் தாஸ் சார்பாக சார்பாக ஆஜராகிய கே. பராசரன், “இஸ்லாமியர்கள் அயோத்தியில் எங்கு வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம். அயோத்தியில் ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன. ஆனால், இந்துகளுக்கு ராமர் பிறந்த இடம் அது. அதனை மாற்ற முடியாது.” என்கிறார்.

இந்துக்கள் பல நூற்றாண்டுகளாக அதற்காக போராடி வருகின்றனர், என்கிறார் பராசரன்.

“இந்துக்களுக்கு அது ராமர் பிறந்த இடம். முஸ்லிம்களுக்கு அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். அவர்களுக்கு எல்லா பள்ளிவாசல்களும் சமம். ஆனால், ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது,” என்றார் பராசரன்.

இஸ்லாமியர்கள் தரப்பில் ஆஜராகும் ராஜீவ் தவான் பராசரன் தரப்பு வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர், “அயோத்தியில் எத்தனை கோயில்கள் உள்ளதென்றும் கூறுவாரா?” என்றார்.

இது குறித்து ஏற்கெனவே ஆவணங்கள் தாக்கல் செய்துவிட்டோம். அதில் அயோத்தியின் முக்கியத்துவத்தையும் விவரித்துள்ளோம் என்றார். -BBC_Tamil

TAGS: