புதுடில்லி ‘கணவன், மனைவியின் விவாகரத்து வழக்கில் எப்போதும் இழப்பு அவர்களின் குழந்தைக்குத்தான்‘ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விவாகரத்து வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோரி அடங்கி அமர்வு அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கணவன், மனைவி பிரச்னையில், நீதிமன்றங்கள் முதலில் மத்தியஸ்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். அது பலனளிக்காத பட்சத்தில், எவ்வளவு விரைவாக முடியுமோ அந்த அளவிற்கு வழக்கை முடிக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், வழக்கு நீடிக்கும் வரையில், ஒவ்வொரு நாளும் குழந்தைக்குத்தான் அதிக பாதிப்பு ஏற்படும். கணவன், மனைவி விவாகரத்து வழக்கில், எப்போதும் இழப்பு, அவர்கள் பெற்ற குழந்தைக்குத்தான்.
பெற்றோரின் பிரிவால், குழந்தை மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. பெற்றோரின் அன்பையும், அரவணைப்பையும் இழக்க நேரிடுகிறது. செய்யாத தவறுக்காக குழந்தை பாதிக்கப்படுகிறது. அதனால், குழந்தை யாரிடம் இருந்தால் நல்லது என சீர்துாக்கிப் பார்த்து, தீர்ப்பளிக்க வேண்டும். குழந்தையின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த பின்தான், இதர ஆட்சேபணைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
dinamalar