காஷ்மீரில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில், கடந்த 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பத்புரா பகுதியில், நேற்று பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். கெரான் செக்டார் பகுதியில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். கடும் பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிரமம் உள்ளது. இருப்பினும், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தொடர்ந்து முயற்சி நடக்கிறது.

dinamalar