கோவை: கோவை துடியலூர் போலீஸ் நிலைய போலீசாருக்கு உணவளித்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால். அந்த நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைத்து போலீசாருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.
கோவை கோதாரி பகுதியைச் சேர்ந்த 61 வயது நபர் கடந்த மார்ச் 23ம் தேதி டில்லி சென்று திரும்பினார். அவர் இரண்டு முறை ஏற்கனவே கொரோனா டெஸ்ட் செய்ததில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. ஆனால் அவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. மூன்றாவது முறையாக கொரோனா டெஸ்ட் செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இ.எஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 5 தினங்களாக துடியலூர் போலீஸ் நிலைய போலீசாருக்கும், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பணியிலிருந்த போலீசாருக்கும் உணவு வழங்கி வந்தார். தற்போது அவருக்கு கொரோனா உறுதியாகி விட்டதால். அவருடன் தொடர்பிலிருந்த துடியலூர் போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் பணியில் இருந்த போலீசார் உட்பட 40 பேருக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்தவரின் நண்பர்களும் உறவினர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களிடமும் கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளது.
dinamalar