இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1489 பேர் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவாக 2916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 187 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 1578 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

malaimalar