சென்னை உள்பட 6 பெருநகரங்கள் இந்தியா முழுவதும் 170 மாவடங்கள் கொரோனாவால் பாதிக்கபட்ட சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி; கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து மாவட்டங்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (‘ஹாட்ஸ்பாட்’), மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் (‘நான் ஹாட்ஸ்பாட்’) மற்றும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகாத மாவட்டங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை இரட்டிப்பாகும் இடங்கள், அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் தேவை. இந்த வகைப்படுத்துதல் வாரம் ஒரு முறை அதாவது ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் மேற்கொள்ளப்படவேண்டும். மிதமான பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரிவில் நாட்டில் 170 மாவட்டங்கள் உள்ளன. மிதமான பாதிப்புக்கு உள்ளான ‘நான்ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள் 207 ஆக உள்ளன. இந்த மாவட்டங்கள் வெள்ளை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படாத மாவட்டங்கள் பச்சை மண்டலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்போது அதிக பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்கள் என்று வகைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் 14 நாட்கள் எந்த புதிய கொரோனா தொற்று ஏற்படாவிட்டால் ஆரஞ்சு நிற மண்டலமாகவும், அடுத்த 14 நாட்களில் புதிதாக தொற்று ஏற்படாவிட்டால் பச்சை மண்டலமாகவும் மாற்றப்படும். ஆக அதிக பாதிப்புக்குள்ளான ‘ஹாட்ஸ்பாட்’ மண்டலத்தில் 28 நாட்கள் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது பச்சை மண்டலத்துக்கு மாற்றப்பட்டுவிடும்.
ஆறு பெருநகரங்கள் மற்றும் மிகப் பெரிய நகரங்களை உள்ளடக்கிய 170 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த பட்டியல் 123 மாவட்டங்களை மிக அதிக அளவிலான கொரோனா தொற்று இருப்பதாக குறிப்பிடபட்டு உள்ளது இதில் நாட்டின் தலைநகர் டெல்லியின் ஒன்பது மாவட்டங்களும் அடங்கும். மும்பை, கொல்கத்தா, பெங்களூரு நகர்ப்புறம், ஐதராபாத், சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய 9 மாவட்டங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
“ஹாட்ஸ்பாட் (சிவப்பு மண்டலம்) வகைப்பாடு” என்பது மாவட்டங்கள் அல்லது நகரங்கள் அல்லது நாடு அல்லது மாநிலத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் இருந்தால், நோய்த்தொற்றின் அதிக விகிதத்தைக் காட்டும் இடங்கள் – 4 நாட்களுக்கு குறைவான விகிதத்தை இரட்டிப்பாக காட்டும் பகுதிகள் சிவப்பு மண்டலத்தில் அடங்கும்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய ஆறு பெருநகரங்களிலும் தற்போது அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன.
மும்பையில் மட்டும் நேற்றைய நிலவரப்படி 1,896 பாதுப்புகள் உள்ளன – மராட்டியமாநிலத்தில் 2,916 எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை மும்பயில் உள்ளன. டெல்லியில் மொத்தம் 1561 பாதிப்புகள் உள்ளன. இவர்களில் 30 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 30 பேர் உயிரிழந்து உள்ளனர். டெல்லி அரசு 56 பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாகக் அறிவித்து உள்ளது. அதாவது அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, இந்த பகுதிகளுக்குள் அல்லது வெளியேற யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
அனைத்து சிவப்பு மண்டலங்களுக்கும் இந்த நோய் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் மாநில அரசுகளுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. 28 நாட்களுக்குள் புதிய கொரோனா பாதிப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை மற்றும் தற்போதுள்ள அனைத்து நோயாளிகளும் குணமடைந்துவிட்டால், அந்த பகுதியை பசுமை மண்டலமாக அறிவிக்க முடியும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிவப்பு மண்டலங்களில் வைரஸுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த வீட்டுக்கு வீடு கணக்கெடுப்புகள் மற்றும் சோதனைகளை நடத்த சிறப்பு குழுக்கள் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறி உள்ளது. சோதனைகள் கொரோனாவுக்கு மட்டுமல்ல. இன்ஃப்ளூயன்ஸா தொடர்பான நோய் மற்றும் கடுமையான சுவாச நோயாளிகளும் பரிசோதிக்கப்படுவார்கள், ஏனெனில் இதுபோன்ற நோயாளிகளு பெரும்பாலும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிவப்பு மண்டலங்கள் முழுவிவரம் | |
ஆந்திரா( 11 மாவட்டங்கள் | கர்னூல், குண்டூர், நெல்லூர்,பிரகாசம் , கிருஷ்ணா, ஒய்எஸ்ஆர்,மேற்கு கோதாவரி, சித்தூர்,கிழக்கு கோதாவரி, விசாகபட்டினம்,அனந்தப்பூர் |
பீகார் ( 1 மாவட்டம்) | சிவான் |
சண்டிகார் ( 1 மாவட்டம்) | சண்டிகார் |
சத்தீஸ்கார் ( 1 மாவட்டம்) | கொர்பா |
டெல்லி ( 9 மாவட்டங்கள்0 | டெல்லி தெற்கு சக்தாரா, தென் கிழக்கு,மேற்கு டெல்லி,டெல்லி வடக்கு, மத்திய டெல்லி,கிழக்கு டெல்லி,புதுடெல்லி,தென் மேற்கு டெல்லி |
குஜராத் (5 மாவட்டங்கள்) | அகமதாபத்,வதோரா,சூரத்,பாவ்நகர், ராஜ்கோட் |
அரியானா (4 மாவட்டங்கள்) | நுஹ், குர்கான்,பரிதாபாத், பல்வால், |
ஜம்மு காஷ்மீர் | ஸ்ரீநகர், பந்திப்பூரா,பாராமுல்லா,ஜம்மு,உதம்பூர்,குப்வாரா |
கர்நாடகா ( 3 மாவட்டங்கள்) | பெங்களூரு புறநகர்,மைசூரு, பெலகாவி |
கேரளா ( 6 மாவட்டங்கள்) | காசர்கோடு,கண்ணூர், எர்ணாகுளம்,மலப்புரம், திருவனந்தபுரம்,பத்தனம்திட்டா, |
மத்திய பிரதேசம் ( 11 மாவட்டங்கள்) | மும்பை, பூனே,தானே,நாக்பூர், சாங்லி,அகமத்நகர்,யுவாத்மால்,அவுரங்காபாத்,புல்தானா, மும்பை புறநகர்,நாசிக் |
ஒடிசா (1மாவட்டம்) | குர்தா |
பஞ்சாப் (4 மாவட்டங்கள்) | சாஸதர்,,எஸ்பிஎஸ் நகர்,ஜலந்தர், பதன்கோட் |
ராஜஸ்தான் ( 11 மாவட்டங்கள்) | ஜெய்ப்பூர், தோங்க்,ஜோத்பூர், பன்ஸ்வாரா,கோதா, ஜுன்ஜ்கினு,பில்வாரா, ஜெய்சல்மர்,பிகனர்,ஜலவார், பரத்பூர் |
தமிழ்நாடு ( 22 மாவட்டங்கள்) | சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி,திண்டுக்கல், விழுப்புரம்,நாமக்கல், தேனி,செங்கல்பட்டு, திருப்பூர்,வேலூர், கடலூர், மதுரை திருவள்ளூர், தூத்துக்குடி,கரூர், விருதுநகர், கன்னியாகுமரி,திருவாரூர், சேலம், நாகபட்டினம் |
தெலுங்கானா(8 மாவட்டங்கள்) | ஐதராபாத், நிஜாமாபாத்,வாரங்கல் புறநகர்,ரங்கா ரெட்டி,ஜொகுலம்பாகத்வால்,மெட்சல் மல்காஜ்கிரி,கரீம் நகர், நிர்மல் |
உத்தரபிரதேசம்( 9 மாவட்டங்கள்) | ஆக்ரா, கவுதம் புத் நகர், மீரட், லக்னோ,காசியாபாத், ஷரன்பூர்,ஷாமிலி, பிரோஸாபாத்,மொராதாபாத், |
உத்தரகாண்ட்( 1 மாவட்டம்) | டேராடூன் |
மேற்குவங்காளம் | கொல்கத்தா, ஹவ்ரா,புர்பா, மிட்னிபூர்,24 பர்கானா தெற்கு |
dailythanthi