சீனா அனுப்பிய 6.5 லட்சம் மருத்துவ பரிசோதனை கருவிகள் வந்து சேர்ந்தன

மருத்துவ பரிசோதனை

சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் கருவி உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை கருவிகள் இந்தியா வந்து சேர்ந்தன.

புதுடெல்லி:  இந்தியாவில் கொரோனா கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை கருவிகள் வாங்க சீனாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சீனாவில் இருந்து இந்தியாவுக்கு 6.5 லட்சம் மருத்துவ பரிசோதனைக் கருவிகள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.

ரேபிட் டெஸ்ட் கிட், ஆர்என்ஏ பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை கருவிகளுடன் சீனாவின் குவாங்சோ விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலையில் புறப்பட்ட விமானம், மதியம் டெல்லி வந்து சேர்ந்தது. இந்த கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்படுகின்றன.

கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள இந்த கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதேபோல் அடுத்த 15 நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைக் கருவிகளை வாங்க உள்ளதாக சீனாவுக்கான இந்திய தூதர் கூறியுள்ளார்.

malaimalar