கொரோனாவில் இருந்து மகாராஷ்டிராவை மீட்பது அரசுக்கு மிகப்பெரிய சவால்: கவர்னர்

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி

கொரோனாவில் இருந்து மகாராஷ்டிராவை மீட்பது அரசுக்கு மிகப்பெரிய சவால் என மாநில மக்களுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உரையாற்றினார்.

மும்பை : மகாராஷ்டிராவின் 60-வது நிறுவன தினத்தையொட்டி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி தொலைக்காட்சியில் மாநில மக்களுக்கு மராத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதர வீழ்ச்சி ஆகிய இரண்டு பிரச்சினைகளையும் சமாளிக்க அரசாங்கம் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மகாராஷ்டிராவை மீட்பது அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவால். இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் சமூக விலகல், ஊரடங்கு விதிகள் மற்றும் அனைத்து பாதிப்பு முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

மகாராஷ்டிரா ஒரு வித்தியாசமான யுத்தத்தின் பின்னணியில் தனது 61-வது ஆண்டிற்குள் நுழைகிறது. இந்த போரை அரசு வலுவான உறுதியுடன் போராடுகிறது. இது எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக போராடி வெற்றி பெறும் பாரம்பரியத்தை கொண்டுள்ளது.

60-வது மகாராஷ்டிரா தினவிழா மாநிலம் முழுவதும் ஆடம்பரமாகவும், அழகாகவும் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்கள், போலீஸ் துறையினர், அரசு ஊரியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

malaimalar