பன்றி காய்ச்சல்
அசாமில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 2 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன.
கவுகாத்தி: இந்தியாவை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் என்ற புதியவகை நோய் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் இந்நோய் தாக்கி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நோயின் தாக்கம் தொடங்கியது. இருப்பினும், கடந்த சில நாட்களாக இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தற்போதைக்கு, அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் 306 கிராமங்களில் மட்டும் இந்த நோய் உள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன. இந்த தகவலை அசாம் மாநில கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி அதுல் போரா தெரிவித்தார்.
malaimalar