பிரதமர் மோடி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

பிரதமர் மோடி பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

‘நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர்’ என்ற பெயரிலான பிரதமர் மோடி பற்றிய புதிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிரு‌‌ஷ்ணன் வெளியிட்டார்.

புதுடெல்லி : பிரதமர் மோடி பற்றிய புதிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. ‘நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர்’ என்ற பெயரிலான அந்த புத்தகத்தை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிரு‌‌ஷ்ணன் வெளியிட்டார்.

நிகழ்ச்சி, காணொலி காட்சி மூலம நடைபெற்றது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்த புத்தகத்தை அகில இந்திய பார் அசோசியேசன் தலைவர் ஆதி‌‌ஷ் சி.அகர்வாலா, அமெரிக்க எழுத்தாளர் எலிசபெத் ஹோரன் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

பெரிதும் அறியப்படாத மோடியின் இளமைப்பருவம் குறித்த தகவல்களும், புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் உள்ளிட்ட 10 இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 10 வெளிநாட்டு மொழிகளிலும் நூல் கிடைக்கிறது.

malaimalar