மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்… மகாராஷ்டிராவில் உயிரிழப்பு 4000-ஐ தாண்டியது

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

இந்தியாவில் இதுவரை 3.43 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 1.80 லட்சம் பேர் பேர் குணமடைந்துள்ளனர்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 343091 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 380 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9900 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது.

இதுவரை 180013 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 10215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடையும் விகிதம் 52.6 சதவீதமாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 153178 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 1.10 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழப்பு 4000ஐ தாண்டி உள்ளது. மொத்தம் 4128 பேர் உயிரிழந்துள்ளனர். 56049 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 46504 பேருக்கும், டெல்லியில் 42829 பேருக்கும், குஜராத்தில் 24055 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநிலம்/யூனியன் பிரதேச வாரியாக கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை:-

அந்தமான் நிகோபார் தீவுகள் – 41
ஆந்திர பிரதேசம் – 6456
அருணாச்சல பிரதேசம் – 91
அசாம் – 4158
பீகார் – 6650
சண்டிகர் – 354
சத்தீஸ்கர் – 1756
தாதர் மற்றும் நாகர் ஹவேலி – 36
டெல்லி – 42829
கோவா – 592
குஜராத் – 24055
அரியானா – 7722
இமாச்சல பிரதேசம் – 556
ஜம்மு – காஷ்மீர்- 5220
ஜார்க்கண்ட் – 1763
கர்நாடகா – 7213
கேரளா – 2543
லடாக் – 555
மத்திய பிரதேசம் – 10935
மகாராஷ்டிரா – 110744
மணிப்பூர் – 490
மேகாலயா – 44
மிசோரம் – 117
நாகலாந்து – 177
ஒடிசா – 4055
புதுச்சேரி – 202
பஞ்சாப் – 3267
ராஜஸ்தான் – 12981
சிக்கிம் – 68
தமிழ்நாடு – 46504
தெலுங்கானா – 5193
திரிபுரா – 1086
உத்தரகாண்ட் – 1845
உத்தர பிரதேசம் – 13615
மேற்கு வங்காளம் – 11494

மாநிலவாரியாக மறுகூட்டலுக்கு உள்படுத்தப்பட்ட நோயாளிகள்-7684

மொத்தம் – 343091

malaimalar