கொரோனா தொற்றில் ரஷ்யாவை முந்தியது இந்தியா: 7 லட்சத்தை நெருங்குகிறது பாதிப்பு

புதுடில்லி: இந்தியாவில் நேற்று(ஜூலை 5) ஒரே நாளில், 24,248 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 6,97,413 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 425 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 19,693 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட விவரம்:

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

3வது இடத்தில்

6.9 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, இந்தியா, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில், ரஷ்யாவை முந்தி, 3வது இடத்தை பிடித்துள்ளது. ரஷ்யாவில், 6,81,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

dinamalar