ஆற்றல்மிக்க இளம் தலைவரை காங்கிரஸ் இழந்துள்ளது: முன்னாள் எம்.பி. பிரியா தத் ஆதங்கம்

சச்சின் பைலட், பிரியா தத்

காங்கிரஸ் கட்சி 2 வலுவான ஆற்றல்மிக்க இளம் தலைவர்களை இழந்து உள்ளது துரதிருஷ்டவசமானது. அவர்கள் கட்சியின் கடினமான காலங்களில் கடுமையாக உழைத்து உள்ளனர் என்று காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பிரியா தத் கூறியுள்ளார்.

மும்பை : ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்-மந்திரியாகவும் இருந்த சச்சின் பைலட் காங்கிரஸ் மேலிடத்தால் அந்த பதவிகளில் இருந்து நேற்று அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக மும்பையை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. பிரியா தத் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது மற்றொரு நண்பரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டார். சச்சின் பைலட், ஜோதிர் ஆதித்யசிந்தியா இருவரும் எனது சகாக்கள் மற்றும் நல்ல நண்பர்கள். எங்களது கட்சி 2 வலுவான ஆற்றல்மிக்க இளம் தலைவர்களை இழந்து உள்ளது துரதிருஷ்டவசமானது. அவர்கள் கட்சியின் கடினமான காலங்களில் கடுமையாக உழைத்து உள்ளனர்” என்றார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரசின் வலிமையான தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா கடந்த மார்ச் மாதம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் கட்சியை விட்டு வெளியேறி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். இதன் காரணமாக அந்த மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

malaimalar