உத்தரகாண்டில் கட்டிடம் இடிந்து விழுந்தது- 3 பேரின் உடல்கள் மீட்பு

மீட்பு பணி

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சுக்குவாலா பகுதியில் இன்று அதிகாலை ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது. தூங்கிக்கொண்டிருந்த பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெறுகிறது

malaimalar