இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகம்: ஒரே நாளில் 49,310 பேருக்கு தொற்று

புதுடில்லி: இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று (ஜூலை 23) ஒரே நாளில் 49,310 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,38,635ல் இருந்து 12,87,945 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 740 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 30,601 ஆனது. 8,17,209 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 4,40,135 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்

சோதனை எண்ணிக்கை

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில்(ஜூலை 23) 3,52,801 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மொத்தம் 1 கோடியே 54 லட்சத்து 28 ஆயிரத்து 170 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநில வாரியாக பாதிப்பு விவரம்

dinamalar