“சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம்” – சோனியா காந்தி

சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்கள்.

மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது. இதற்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்றும், சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டிய சமூக கடமை மத்திய அரசுக்கு உள்ளதாகவும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை 2020-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வறுமையை ஒ​ழிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது ஆதலால் சுற்றுச்சூழல் விதிமுறைகளை சீர்குலைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடோடு ஒன்று ஒருங்கிணைந்தது என்று சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் கடந்த  6 ஆண்டுகளாக எந்தவித சிந்தனையும் இன்றி மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சோனியா காந்தி, மோடி அரசை சாடியுள்ளார்.

dailythanthi