” தியாகம் செய்ய இந்தியர்கள் அஞ்ச மாட்டார்கள் ” – பிரதமர் மோடி சுதந்திரதின உரையின் அம்சங்கள்

புதுடில்லி: இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடமாக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தில், டில்லி செங்கோட்டையில் 7 வது முறையாக தேசிய கொடியேற்றி பேசியதாவது:
*74வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்நம் நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வ நன்றி

*சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்கும் நேரம் இது

*கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் குழந்தைகளை காண முடியவில்லை.

*நாட்டில் பல்வேறு இடங்களில் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் போர்க்களமாக உள்ளது

*மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்

*இந்த தருணத்தில் கொரோனா முன்கள பணியாளர்களை நினைவு கொள்ள வேண்டும்.

*கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களக்கு நன்றி.

*கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் வெல்வோம்

போராட்டத்தில் இருந்து கற்று கொண்ட பாடங்களை மறந்துவிடக்கூடாதுபன்முகத்தன்மையே நமது பலம்

*பன்முகத்தன்மை கொண்ட நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர்.

*இந்தியாவை தொடர்ந்து ஆளலாம் என நினைத்த ஆங்கிலேயர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

*தியாகம் செய்வதற்கு இந்தியர்கள் அஞ்ச மாட்டார்கள்

*இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்

*நாட்டின் 75வது சுதந்திர தின விழா மிக பிரமாண்டமாக இருக்கும்

*நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம்

dinamalar