இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27.67 லட்சமாக உயர்வு- ஒரே நாளில் 1092 பேர் உயிரிழப்பு

நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 1092 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி: உலக அளவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 60 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 27,67,274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 64,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1092 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52,889 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 20,37,871 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,76,514 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.9 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 73.6 சதவீதமாகவும் உள்ளது.

malaimalar