கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: ஆவணங்களை அழிக்க சதி என குற்றச்சாட்டு- பேராட்டக்காரர்கள் மீது தடியடி

தீ விபத்தில் எரிந்த ஆவணங்கள்

கேரளாவின் தலைமை செயலகத்தில் தீப்பிடித்த சம்பவம் தங்கம் கடத்தல் வழக்கில் ஆவணங்களை அழிக்க செய்யப்பட்ட சதி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

கேரளாவில் தூதரகம் பெயரை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ்க்கு முதலமைச்சர் அலுவலகத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் இருந்து வருகிறது.

இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்து சம்பவம் தங்கம் கடத்தல் வழக்கின் முக்கிய ஆவணங்களை அழிப்பதற்கான சதி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தலைமைச் செயலாளம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள் கோழிக்கோட்டில் உள்ள தலைமை காவல் அலுவலகத்திற்கு செல்ல முயற்சினர். போலீசார் அவர்களை தடுக்க முயற்சித்தனர். அப்போது மோதல் ஏற்பட போலீசார் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.

தங்கம் கடத்தல் விவகாரத்தை முன்னிட்டு பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பினராயி விஜயன் வெற்றி பெற்றது.

dinamalar