ஸ்ரீநகர்: காஷ்மீரின் சர்வதேச எல்லைப்பகுதியில் கிராமவாசிகளின் பாதுகாப்பிற்காக 8 ஆயிரம் பதுங்கு குழிகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.
காஷ்மீரின் கத்துவா உள்ளிட்ட சர்வேதேச எல்லைப்பகுதியில் பாக்.ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதில் கிராமவாசிகள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து எல்லையையொட்டியுள்ள கிராமங்களில் பதுங்குழிகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட டிவிஷனல் கமிஷனர் சஞ்சீவ் வர்மா கூறியது, எல்லையையொட்டியுள்ள கிராமப்பகுதிகளில் இதுவரை சமுதாய மற்றும் தனிநபர்களுக்கென 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது என்றார்.
கத்துவா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியது, பாக்.ராணுவத்தினர் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். இதனால் எங்களின் அன்றாட வாழ்வாதார பணி பாதிக்கப்படுகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள பதுங்குழியில் எங்களால் பாதுகாப்பாக வாழ முடியும் என்றார்.
dinamalar