காணொலி காட்சி மூலம் ஐநா சபையில் இந்திய பிரதமர் மோடி பேச்சு
கொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? என்று ஐ.நா. சபையின் பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வது ஆண்டு பொது கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்று உரையாற்ற முடியாததால் காணொலி காட்சி மூலம் உரையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஐநா பொதுக்கூட்டத்தில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.
அவர் பேசியதாவது:-
- ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது
130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்.
கடந்த 8 முதல் 9 மாதங்களாக உலகம் கொரோனா வைரசை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது.
கொரோனா வைரசுக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த போரட்டத்தில் ஐநா சபை எங்கு உள்ளது?
இந்த போராட்டத்தில் ஐநா சபையின் பங்கு எங்கே? அதன் தாக்கம் எங்கு உள்ளது?
மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது
உலகின் 150 நாடுகளுக்கு கொரோனா மருந்தை இந்திய மருத்துவமனைகள் அளித்துள்ளன.
கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 3 நிலைகளை கடந்துள்ளோம்.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா கொரோனா தடுப்பில் தனது பொறுப்பை நிறைவேற்றும்.
அமைதி,பாதுகாப்புக்காகத்தான் இந்தியா எப்போதும் குரல் எழுப்பும்.
மாற்றம், சீர்திருத்தம் என்ற மந்திரங்கள் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பாடுபடுகிறோம்.
இந்த மந்திரம் மற்ற நாடுகளுக்கும் பலன் அளிக்கக் கூடியது.
500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்தியா இலவச மருந்து வழங்கியுள்ளது.
கிராமங்களிலுள்ள 150 மில்லியன் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கியுள்ளது.
ஆப்டிகல் பைபர் மூலம் இணைய வசதியையும் பரவலாக்கப்பட்டுள்ளது.
சுயசார்பு இந்தியா கொள்கையை முன்னெடுக்கிறோம். பெண்கள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறோம்.
இந்தியப் பெண்கள்தான் உலகின் சிறந்த மைக்ரோ பொருளாதாரத்தை முன்னெடுக்கிறார்கள்.
இந்தியாவில் பெண்களுக்கு 26 வாரம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது.
மூன்றாம் பாலினத்தவருக்கும் தனித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
ஐநா சபையின் சீர்திருத்த செயல்முறைகள் அதன் உண்மையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவுகளை எட்டுமா என்பதில் இந்திய மக்கள் கவலைகொள்கின்றனர்.
ஐநா சபையின் முடிவெடுக்கும் நடைமுறையில் இருந்து இந்தியா இன்னும் எவ்வளவு காலம் ஒத்துக்கப்பட்டு இருக்க வேண்டும்.
நாங்கள் பலமாக இருக்கும்போது உலகிற்கு அச்சுறுத்தலாகவும் இல்லை. நாங்கள் பலவீனமாக இருக்கும்போது உலகிற்கு சுமையாகவும் இருந்ததில்லை.
மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து வரும் ஒரு நாடு உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் போது அந்நாடு எவ்வளவு காலம் (ஐநா சபை நிரந்த உறுப்பினர்) காத்து இருக்க வேண்டும்.
என்றார்.
malaimalar