ஹத்ரஸ் பாலியல் வழக்கு: சிறப்பு விசாரணை குழு அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரபிரதேச ஹத்ரஸ் பாலியல் வழக்கு: சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரப்பிரதேசம் ஹத்ரஸ்: உத்தரபிரதேசத்தின் ஹத்ரஸில் 2 வாரங்களுக்கு முன்  20 வயது இளம் பெண் ஒருவர் உயர்சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். இவர் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமே எதிர்ப்பு தெரிவித்தும் உத்தரபிரதேச போலீசார் இளம் பெண்ணின் குடும்பத்தினர் யாரும் இல்லாமல் அதிகாலை 2.30 மணிக்கு அவரது உடலை எரித்து உள்ளனர். இளம் பென்ணின் குடும்பத்தினரையும், உறவினர்களையும்  வீடுகளில் பூட்டி வைத்து உள்ளனர்.

டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று காலை பெண் இறந்தார். 2012 நிர்பயா கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு இணையான கொடூரமான தாக்குதலில் அவர் உடம்பில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருந்தன. பக்கவாதம் மற்றும் அவரது நாக்கில்  காயம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் பாலியல் வழக்கு தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு 7 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்டு உள்ளார்.

malaimalar