விவசாய துறை மாற்றத்தால் லாபம் அதிகரிப்பு:மோடி

புதுடில்லி: விவசாயத்துறையில் கொண்டுவந்துள்ள மாற்றத்தால் லாபம் மட்டுமின்றி ஏற்றுமதியும் அதிகரிக்கும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: இந்தியாவுக்கும் கனடாவிற்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சம் காரணமாக இரு தரப்புக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது. உற்பத்தி சேவை கல்வித்துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு இந்தியா தான் சிறப்பான இடம்.

தொழில் முனைவோர் மற்றும் கடுமையாக உழைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க கூடிய சூழல் உருவாகி உள்ளது. 800 மில்லியன் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. 80 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்

dinamalar