டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு- மக்கள் அவதி

காற்று மாசு

காற்றில் மாசுவின் அளவை குறைக்க டெல்லி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புதுடெல்லி: டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி  டெல்லியின் ஆனந்த்விஹார் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 405 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும்.  காற்றின் தரக்குறியீடு 50 வரை இருந்தால் மட்டுமே அது நல்ல நிலை. டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமாகவே இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங்களை ‘ஆப்’ செய்யுமாறு மாநில அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஆனாலும் மாசு குறைந்த பாடில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்

malaimalar