ஆந்திர மாநில பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகள் இன்று முதல் திறக்கப்பட்டன.

விஜயவாடா, உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று  வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. நோய்  பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளில் விருப்பத்துக்கேற்ப பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஆந்திர மாநில பள்ளிகளில் 9 மற்றும் 10 வகுப்புகள் இன்று முதல் திறக்கப்பட்டன. முன்னதாக இன்று முதல் (நவம்பர் 2-ம் தேதி) முதல் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், “நவம்பர் 2-ம் தேதி முதல் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும், அதில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 2ம் தேதியும்,  6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 24 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பள்ளிகள் அரை நாள் மட்டுமே நடத்தபடும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

dailythanthi